1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ramadoss says Former CM Karunanithi cheating him in reservation

அழுகுன பழத்தை குடுத்த கருணாநிதி ஏமாத்திட்டார்! – ராமதாஸ் ட்வீட்!

Tamilnadu
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி கேட்டு வரும் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமகவினர் வன்னியர் பிரிவினருக்கு 20% இடஒதுக்கீடு கோரி வரும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இடஒதுக்கீடு கோரி சென்னையில் பாமகவினர் கடந்த மாதம் நடத்திய போராட்டம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ட்விட்டரில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ” 21 உயிர்களைக் கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை கலைஞர் சூழ்ச்சி செய்து கூடுதலாக 107 சாதிகளுக்கு அள்ளிக்கொடுத்தார். நல்ல கனி என்று அழுகிய கனியைக் கொடுத்து ஏமாற்றினார்!” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பெண்ணோட வயிற்றில தான பிறந்தீங்க? உதயநிதியை சாடிய டிடிவி!!