1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sarathkumar wants 5 lakhs for talk about rajnikanth

ரஜினி பத்தி சொல்லணுமா? அக்கவுண்ட்ல அஞ்சு லட்சம் போடுங்க! – சரத்குமார் நறுக்!

Tamilnadu
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் பேசி வரும் நிலையில் சரத்குமார் தனது கருத்தை கூறியுள்ளார்.

நீண்ட நாட்களாக கட்சி தொடங்கும் பணிகளை மேற்கொண்டு வரும் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அதில் தான் கட்சி தொடங்குவதற்கு முன் சில விதிமுறைகளை பின்பற்ற இருப்பதாக அவற்றை வெளியிட்டார். பிறகு மக்கள் புரட்சி நடந்த பிறகு தான் கட்சி ஆரம்பிக்க போவதாக தெரிவித்தார்.

ரஜினியின் அரசியல் குறித்து தமிழக அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் ஆதரவாகவும், எதிராகவும் பேசி வருகின்றனர். இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியபோது ”யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நான் ரஜினியை பற்றி பேச வேண்டுமானால் எனது அக்கவுண்டில் 5 லட்சம் போடுங்கள். சொல்கிறேன்” என கூறியுள்ளார்.

5 லட்ச ரூபாய் கொடுத்து கேட்கும் அளவிற்கு ரஜினி பற்றி அப்படியென்ன சொல்ல போகிறார் என அரசியல் வட்டாரங்களில் தமாஷ் பேச்சு எழுந்துள்ளதாம்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பழைய நிலைக்கு திரும்பிய தங்கத்தின் விலை!!