பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 14 காசுகள் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.72.71 க்கும், டீசல் லிட்டர் ரூ.66.19 ஆகவும் விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் இன்று நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் குறைந்து பெட்ரோல் ரூ.72.57 க்கும், டீசல் 17 காசுகள் விலை குறைந்து ரூ.66.02 க்கும் விற்பனையாகி வருகிறது.