திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (17:05 IST)

எச் ராஜாவைக் கைது செய்ய அவரிடமே அனுமதியா?- ராமதாஸ் கிண்டல்

எச் ராஜாவைக் கைது செய்ய சட்ட ஆலோசனைப் பெற்று வருகிறோம் என்று கூறிய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை ராமதாஸ் கேலி .செய்யும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.


விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றக் கோரி நடைபெற்ற ஊர்வலத்தில் உயர் நீதிமன்றத்தையும் காவல் துறையையும் தவறாகப் பேசிய சர்ச்சையில் ராஜாவை கைது செய்ய வேண்டுமெனப் பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் காவல்துறையைத் தவறாகப் பேசிய நடிகர் கருணாஸ் உடனடியாக கைது செய்யப்பட்டதும் இது குறித்த அழுத்தம் அதிகமானது. கருணாஸுக்கு ஒரு நியாயம் ராஜாவுக்கு ஒரு நியாயமா எனக் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. நீதிமன்றம் தானாக முன்வந்து தொடர்ந்த வழக்கிலும் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

இத்தனை நடந்தும் இன்னும் ஏன் எச் ராஜாவை கைது செய்யாமல் இருப்பதேன் என்ற கேள்விக்குப் பதிலளித்த துணை முதல் ஓ பி எஸ் ’ராஜா கைது தொடர்பாக முறையான சட்ட ஆலோசனைகளை பெற்று வருகிறோம்’ எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ‘இந்த விஷயத்தில் உங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவது கருப்புக் கோட் போட்ட எச் ராஜாவாமே உணமையா?’ எனக் கிண்டலாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.