அதிமுக அணிகள் இணைப்பு ; தேனாறும், பாலாறும் ஓடும் - ராமதாஸ் கிண்டல்
6 மாத கால மோதலுக்கு பின், ஓ.பி.எஸ் அணி இன்று எடப்பாடி அணியோடு இணைந்துள்ளது.
ஓ.பி.எஸ்-ஸும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவருக்கொருவர் கை கொடுத்து கொண்டனர். அதன் பின் பேசிய ஓ.பி.எஸ் “ நாங்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள். சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த எங்களை, ஜெயலலிதாவின் ஆன்மா எங்களை இணைத்துள்ளது” எனப் பேசினார்.
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் “அதிமுக அணிகள் இணைப்பு. இனி தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடும். காவிரி கரைபுரளும், இறந்த உழவர்கள் உயிர் பிழைப்பார்கள். வாழ்க ஜனநாயகம்!” எனக் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.