இலங்கையில் சோகம்: ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலி

ss
Last Modified வியாழன், 19 ஏப்ரல் 2018 (19:23 IST)
இலங்கையில் உள்ள ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 
 
இலங்கையில் உள்ள ஹொரானா நகரில் இருக்கும் ரப்பர் தொழற்சாலையில் பணியாளர் ஒருவர் அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
 
அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு அவரை தாக்கியது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அருகில் உள்ளவர்கள் அவரை அந்த தொட்டியில் இருந்து மீட்க உள்ளே இறங்கினர்.
 
அப்போது அவர்களும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனையடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இறந்தவர்கள் உடம்பை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :