புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (09:35 IST)

ஏ சி சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் – வேலூர் தேர்தல் அப்டேட் !

வேலூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ சி சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேலை செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வேலூரில் பணப்பட்டுவாடாவால் ரத்து செய்யப்பட்ட மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் நடக்க இருக்கிறது. இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிடுகின்றனர், இந்நிலையில் ஏ சி சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் களத்தில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினி, மறைமுகமாக அதிமுக மற்றும் பாஜகவுக்கு ஆதரவளித்து வருவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த செய்தி அரசியல் களத்தில் பரபரப்புகளை உண்டாக்கிக்கியுள்ளது. ஏ சி சண்முகம், ரஜினியின் நண்பர் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இதுபற்றி அதிமுக அமைச்சர் ஒருவரிடம் கேள்வி எழுப்பியபோது ‘ரஜினி வேலூர் வேட்பாளர் ஏ சி சண்முகத்துக்கு ஆதரவு அளித்துள்ளார் என்பது அதிகாரப்பூர்வமற்ற தகவல்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.