வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2019 (19:03 IST)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம்: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது இன்னும் உறுதியாக கூற முடியாத சூழ்நிலையில் அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார் 
 
தான் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்றும், ஒரு ரஜினி ரசிகனாக தன்னுடைய ஆலோசனை என்னவெனில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என்பதே என்றும் அவர் எப்போதும் சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்கள் செயல்படுவது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு அவர் பதிலளித்தபோது 'வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பதை ரஜினி ரசிகர்கள் முடிவு செய்ய முடியாது என்றும் அது மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும் மேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார் 
 
முன்னதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தொழில் நுட்பம் மற்றும் ஊடகப் பிரிவின் மாநில நிர்வாகிகள் மற்றும் சட்ட மன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கலந்து கொண்டார்