திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (08:54 IST)

அதிமுக தலைவராக ரஜினியா ? – ஷாக்கான ஜெயக்குமார் !

அதிமுக தலைவராக ரஜினியை நியமிப்பதற்கு பாஜக சார்பில் திரைமறை வேலைகள் நடந்துவருவதாக எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

ரஜினி தனது அரசியல் வருகையை உறுதி செய்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் கட்சி தொடங்குவதற்கான எந்த மும்முரமும் இல்லாமல் அவர் உள்ளார். வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் நதிநீர் இணைப்புத் திட்டத்தை மட்டும் ஆதரிக்கும் வண்ணம் பேசினார்.

தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவித்துவரும் பாஜக ரஜினியின் ஆதரவை மிக நீண்ட நாட்களாக கோரி வருகிறது. இப்போது சரியானத் தலைமை இல்லாமல் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக விற்கு ரஜினியைத் தலைவராக்கவும் முயற்சிகள் நடப்பதாகப் பேச்சுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது ‘அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்டுள்ள மாபெரும் இயக்கம். ஜெயலலிதா சொன்னது போல அவருக்குப் பிறகு நூறாண்டுகள் வரை கட்சியும் ஆட்சியும் இருக்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணம். அதனடிப்படையில் அதிமுகவினர் ஒற்றுமையாகச் செயல்பட்டு வரும் நிலையில் அதற்கான ரஜினி வந்து எங்களுக்கு  தலைமைத் தாங்க வேண்டிய நிலைமை ஒரு காலத்திலும் ஏற்படாது.’ எனத் தெரிவித்துள்ளார்.