வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2019 (11:37 IST)

வேலுமணியின் பாஜக பிளான் – அப்செட்டில் எடப்பாடி பழனிச்சாமி !

முதல்வருக்கு மிகவும் நெருக்காமானவர் எனக் கூறப்பட்டு வந்த் அமைச்சர் வேலுமணி பாஜகவுக்கு செல்ல திட்டமிட்டு வருவதால் முதல்வர் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவில் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரண்டு அணிகள் செயல்பட்டுவருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அதில் ஈபிஎஸ் அணியில் மிகவும் முக்கியமானவர் அமைச்சர் வேலுமணி. முதல்வர் தமிழக அரசு சார்பாக டெல்லிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகளில் தன்னால் செல்ல முடியாத போது வேலுமணியைதான் அனுப்புவார்.

அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த வேலுமணி இப்போது டெல்லி பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைக் கேட்டதில் இருந்து முத்லவர் தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.