அறுவை சிகிச்சையில் குழந்தையின் கை பாதிப்பு: ராஜீவ் காந்தி மருத்துவமனை விளக்கம்..!
மருத்துவரின் தவறான அறுவை சிகிச்சையால் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில் இதுகுறித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில் கூறி இருப்பதாவது: குறை பிரசவத்தில் பிறந்த ஒன்றரை வயது குழந்தைக்கு மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது. நீர்க்கசிவை கட்டுப்படுத்த ஐந்து நாட்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் வலது கையில் ரத்த உறைவு ஏற்பட்டதால் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ம் வலது கை முழுவதும் பரவியதால் கையை அகற்றும் நிலை ஏற்பட்டது.
மருத்துவத்துறை அமைச்சரின் உத்தரவுபடி விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது, விசாரணை குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Edited by Siva