தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் உத்தரவு
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், காவேரி மருத்துவமனையில் இருந்தபடியே அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு நேற்று காணொளி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார்.
இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று சமீபத்தில் தமிழ அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர். ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அமைச்சர் செந்தில் பாலாஜி தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
செந்தில் பாலாஜி மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பதவியில் நீடித்தால் விசாரணை நியாயமாக நடக்காது'' என்று அமலாக்கத்துறையினர் வழக்கை சுட்டிக்காட்டி ஆளு நர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இது தமிழக ஆளுங்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.