திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2023 (14:17 IST)

இறந்த தாயின் சடலத்துடன் தூங்கிய குழந்தைகள்

திருப்பத்தூர்  அருகே தாய் இறந்தது தெரியாமல் அவரது சடலத்துடன் 2 குழந்தைகள் தூங்கிய சம்பவம்  நடந்துள்ளது.

திருப்பத்தூர் அடுத்துள்ள தாதனவலசை பகுதியைச் சேர்ந்தவர் திருநாதன். இவரது மனைவி கீதா(29). இந்த தம்பதியர்க்கு 4 மற்றும்  வயதில் 2 மகன்கள் உள்ளனர். 

திருப்பூர்  மாவட்டத்தில் தங்கி திருநாதன் அங்குள்ள கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இதனால், கீதா தன் குழந்தைகளுடன் தாதனவலையில் வசித்து வந்தார்.

கடந்த 27 ஆம் தேதி இரவு கீதா தன் இரு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் காலையில் நீண்ட நேரமாகியும் கீதாவின் வீடு திறக்கவில்லை. இதனால், அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்தவர்கள் கதவைத் தட்டியுள்ளனர்.

இரு மகன்கள் மட்டும் கதவைத் திறந்தனர். கீதாவை அவர்கள் எழுப்பியபோது, அவர் எழுந்திருக்கவில்லை. உடனே அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

அதன்பின்னர், கீதாவின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, திருப்பத்தூர் தாலூகா போலீஸார் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இரவில் தூங்கிய தாய் திடீரென்று இறந்து போனது கூட தெரியாமல், குழந்தைகள் தூங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.