1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 8 மார்ச் 2018 (11:22 IST)

கமல், ரஜினியால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது - கவுதமி பேட்டி

கமல்ஹாசனிடமிருந்து பிரிந்து வந்த பின் அவ்வப்போது முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக நடிகை கவுதமி கருத்து தெரிவித்து வருகிறார்.

 
சமீபத்தில், விஸ்வரூபம் உள்ளிட்ட சில படங்களில் பணிபுரிந்ததற்காக கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனம் தனக்கு பணம் பாக்கி வைத்திருப்பதாக கவுதமி புகார் கூறினார்.
 
இந்நிலையில், உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெ.வின் சமாதிக்கு கவுதமி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது “தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை. அதை ரஜினி, கமல் ஆகியோர் ஓர் இரவில் நிரப்ப முடியாது. நடைமுறையில் அதற்கு சாத்தியமில்லை. ஜெயலலிதாவும், கருணாநிதியும் பல வருடங்கள் உழைத்து, சாதனைகள் செய்து மக்களின் அபிமானத்தை பெற்றனர். அது உடனே நிகழ்ந்துவிடாது” எனக் கூறினார்.