ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 மார்ச் 2018 (13:19 IST)

அரசியல் எண்ட்ரிக்கு பின் பட்டத்தை தூக்கி எறிந்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் என்று ரஜினிகாந்த் நடித்த படம் ஒன்றில் பாடல் ஒன்றே உள்ளது. ரஜினியை அவர் பெயர் சொல்லி அழைப்பவர்களை விட சூப்பர் ஸ்டார் என்று சொல்லி அழைப்பவர்களே அதிகம். அவரது சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்ற கடந்த 40 வருடங்களாக யாராலும் முடியவில்லை

இந்த நிலையில் ரஜினிகாந்த் வெகுவிரைவில் அரசியல் கட்சியை ஆரம்பித்து பொதுசேவையில் ஈடுபடவுள்ளார். அதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அவர் தனது சூப்பர் ஸ்டார் பட்டத்தை தூக்கி எறிந்துள்ளார்.

ஆம், கடந்த நான்கு ஆண்டுகளாக டுவிட்டரில் இருக்கும் ரஜினிகாந்த், தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினி என்பதனை நீக்கிவிட்டு தற்போது ரஜினிகாந்த் என்று பெயர் மாற்றியுள்ளார். இந்த மாற்றம் ஏன்? சூப்பர் ஸ்டார் பட்டத்தை அவர் தவிர்த்தது ஏன்? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை