ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? விவரித்த ரஜினி!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 30 நவம்பர் 2020 (13:58 IST)
ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ரஜினி அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது மன்ற நிர்வாகிகளோடு இன்று கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு புறப்பட்டுச் சென்ற ரஜினி அங்கு பின்வருமாறு பேட்டி அளித்தார். 
 
நிர்வாகிகளின் கருத்துக்களை என்னிடம் கூறினார்கள். நானும் எனது கருத்தை பகிர்ந்து கொண்டேன். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்கள் உடன் இருப்போம் என அவர்கள் கூறினர். நான் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் தெரிவிக்கி்றேன் என்று தெரிவித்துள்ளார்.
 
அதோடு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரஜினியிடம் இருந்து விரைவில் அறிக்கை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :