1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (07:45 IST)

ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்கள்: போயஸ் கார்டனில் பரபரப்பு!

ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்கள்: போயஸ் கார்டனில் பரபரப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது அரசியல் வருகையை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் போயஸ் கார்டன் முழுவதும் இன்று அவரது அரசியல் வருகையை அழைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நீங்கள் ஆளனும், மக்கள் வாழனும் என்றும், நீங்க வாங்க ரஜினி என்றும், எல்லாமே இங்கு நீங்கள் தான் என்றும் வாசகங்கள் உடைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் போயஸ் கார்டனின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டு இருப்பதை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உங்கள் நலமே எங்கள் தேசத்தின் நலம் என்றும் ஆன்மீக அரசியலுக்கு அடி எடுத்து வைக்க வாருங்கள் என்றும் ஒரு சில போஸ்டர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இன்று தனது அரசியல் வருகையை ரஜினிகாந்தை அறிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கட்சி தொடங்கும் தேதியையும் முதல் பொதுக்கூட்டம் நடக்கும் தேதியையும் அவர் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இன்று காலை 10 மணிக்கு மக்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கும் ரஜினிகாந்த் அதன் பிறகு செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் அந்த சந்திப்பின்போது தனது அரசியல் வருகையை அவர் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது