1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 ஜூலை 2021 (12:51 IST)

நிர்வாகிகளை சந்திக்கும் முன் தமிழருவி மணியனை சந்திக்கின்றாரா ரஜினிகாந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜூலை 13-ஆம் தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தமிழருவி மணியனை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஜூலை 13-இல் அனைத்து மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் எதற்காக இந்த சந்திப்பு என்ற குழப்பத்தில் உள்ளனர் 
 
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதற்கு முன்பாக தமிழருவி மணியனை ரஜ்னிகாந்த் சந்திக்க இருப்பதாகவும் அவரிடம் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ரஜினி மக்கள் மன்றத்தை தமிழரின் மணியனிடம் ஒப்படைக்க போகிறாரா அல்லது அரசியலுக்கு மீண்டும் வருவது குறித்த அறிவிப்பை வெளியிடப் போகிறாரா? அல்லது இந்த சந்திப்பு சாதாரண நலம் விசாரிக்கும் சந்திப்பா? என்பது தெரியாததால் பெரும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு திரும்ப வாய்ப்பில்லை என்றே பலர் கூறி வருகின்றனர்