நீங்க தான் தைரியமான ஆளாச்சே...? ரஜினியை வம்புக்கு இழுக்கும் திமுக எம்பி!!
யாரு ராஜினாமா செய்யனும் என்று தைரியம் இருந்தால் சொல்லுங்க ரஜினி சார் என திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் சமீபத்தில், எதிர்பாராத வகையில் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்தார். டெல்லி வன்முறைக்கு மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்வி தான் காரணம் என்றும் ஆரம்பத்திலேயே இந்த கலவரத்தை அடக்கி ஒடுக்கி இருக்கலாம் என்றும், மத்திய அரசின் கவனக்குறைவால்தான் இந்த கலவரம் பெரிதாகி உள்ளது என்றும் கூறினார்.
மேலும் மதத்தை வைத்து அரசியல் செய்வதை தான் ஒருபோதும் விரும்பவில்லை என்றும் அவ்வாறு மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை கடுமையாக கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசை இதுவரை நேரடியாக ரஜினி விமர்சனம் செய்யாத நிலையில் திடீரென அவர் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திமுக எம்பி செந்தில்குமார், டெல்லி வன்முறைக்கு ராஜினாமா பண்ணிட்டு போங்கன்னு சொல்லிட்டீங்க ரஜினி சார், ஆனா யாரு ராஜினாமா செய்யனும் என்று தைரியம் இருந்தால் சொல்லுங்க. உங்க அர்ஜுனா? கிருஷ்ணவா? இல்ல சிஏஏவுக்கு வாக்கு அளித்த அதிமுக அரசயா? பாமக நிறுவனர் ராமதாஸய? இல்ல நீங்க பொய் சாக்கு சொல்லும் ஊடகத்தைய என கேள்வி எழுப்பியுள்ளார்.