செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (10:31 IST)

புதிய டிவி சேனல் கன்பார்ம்: ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த புதிய டிவி சேனல் துவங்க இருப்பதாகவும், இதற்காக சில பெயர்களை பதிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. 
 
இன்றைய நிலையில் அரசியல் கட்சி என்று இருந்தால் அக்கட்சிக்கு என ஒரு தொலைக்காட்சி சேனல் இருந்தால் மட்டுமே அக்கட்சியின் கொள்கைகள், செய்திகள் மக்களை சென்றடைவதாக நம்பப்படுகிறது. 
 
தற்போது இருக்கும் பல சேனல்களில் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக இருப்பதால் சேனல் இல்லாத கட்சிகளின் நிகழ்வுகள் கூட மக்களை சென்றடைவதில்லை.
 
அந்த வகையில் அரசியலில் களமிரங்கவுள்ள ரஜினி டிவி சேனல் ஒன்றை துவங்க உள்ளதாகவும் அதற்காக சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வந்தது.
தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் ரஜினிகாந்த. நேற்று அமெரிக்கா செல்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு, 
 
என்னுடைய பெயரில் வேறு யாரோ தொலைக்காட்சி சேனல் தொடங்க முயற்சிப்பதாக எனக்கு தகவல் வந்தது. அதற்கு முன்பாக எனது பெயரில் தொலைக்காட்சி சேனலுக்கு நான் பதிவு செய்துள்ளேன். கட்சி துவங்கிய பின்னர் தேர்தல் குறித்தும், கூட்டணிகள் குறித்தும் அறிவிப்பேன். 
 
பேட்ட படத்தின் மீது நிறைய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். பிறக்கப்போகும் 2019 புத்தாண்டில் மக்கள் அனைவரும் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்தார்.