1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Stock Market Continues Downtrend: Investors Concerned as Sensex, Nifty Trade Lower Today

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

பங்குச்சந்தை
கடந்த மூன்று நாட்களாகவே சரிவை சந்தித்து வந்த இந்தியப் பங்குச் சந்தைகள், இன்று ஏற்றம் காணும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த நிலையில், இன்றும் சரிவிலேயே வர்த்தகமாகி வருவது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 54 புள்ளிகள் சரிந்து, 80,835 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 2 புள்ளிகள் சரிந்து 24,670 என்ற நிலையில் உள்ளது.
 
அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஜியோ பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் உயர்ந்து வருகின்றனர்.
 
டைட்டான், டெக் மகேந்திரா, டிசிஎஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், ஸ்டேட் வங்கி, மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், சிப்லா, ஆக்சிஸ் வங்கி, ஆசியன் பெயிண்ட்ஸ் ஆகிய பங்குகள் சரிந்து வருகின்றன.
 
தொடர்ச்சியான இந்தச் சரிவு முதலீட்டாளர்களின் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சந்தை எப்போது மீட்சி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!