வியாழன், 3 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 ஏப்ரல் 2025 (11:10 IST)

மசோதா நிறைவேறினால் வக்பு நிலங்களை பாஜக விற்கும்: அகிலேஷ் யாதவ்

akilesh
வக்பு வாரியம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினால், வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்களை பாஜக விற்பனை செய்யும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக எதிர்க்க தயாராகி வருகின்றன.
 
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த அகிலேஷ் யாதவ், செய்தியாளர்களிடம் பேசும் போது, "இந்த மசோதா யாருக்காக கொண்டு வரப்படுகிறதோ அவர்களை வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதைவிட பெரிய அநியாயம் என்ன இருக்க முடியும்? 
 
பாஜக நிலத்தை நேசிக்கும் ஒரு கட்சி. ரயில்வே நிலையத்தையும் பாதுகாப்புத்துறை நிலத்தையும் விற்ற நிலையில், அடுத்த கட்டமாக வக்பு வாரிய நிலத்தையும் விற்பனை செய்வார்கள். இதெல்லாம் அவர்களின் தோல்வியை மறைப்பதற்கான ஒரு திட்டம்," என்று தெரிவித்துள்ளார்.
 
அதேபோல், வக்பு மசோதா மசோதாவுக்கு ஆதரவளித்தால், பீகாரில் நிதிஷ்குமார் தோல்வியடைவார் என காங்கிரஸ் பிரமுகர் கபில்சிபல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran