1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (16:07 IST)

கவிழ்த்து விட்ட ரஜினி, பாஜகவை காகா பிடிக்கும் அர்ஜூன மூர்த்தி?

ரஜினியுடன் இருப்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என தெரிவித்துள்ளார் அர்ஜூன மூர்த்தி.

 
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவது இல்லை என்றும் அரசியலில் குதிக்க போவதில்லை என்றும் தனது உடல் நலன் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் எனவே ரசிகர்கள் தன்னை மன்னிக்கும்படி ஏற்று உருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.  
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று 100% நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவரது உடல் நலனை கணக்கில் கொண்டு ரசிகர்கள் தற்போது ஆறுதல் அடைந்து வருகின்றனர். 
 
இந்நிலையில், ரஜினியுடன் இருப்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என தெரிவித்துள்ள அர்ஜூனமூர்த்தி அவரின் முடிவை மதிக்க வேண்டும் என கோரியுள்ளார். அதோடு மோடியும் ரஜினியும் தனது இரண்டு கண்கள் என தெரிவித்துள்ளார்.