1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai under heavy protection for new year celebrations

புத்தாண்டு கட்டுப்பாடு; ஹோட்டல்கள், கடற்கரையை மூட உத்தரவு – கடும் கண்காணிப்பில் சென்னை

Tamilnadu
நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் உள்ளிட்ட மாநகரங்களில் புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம், மகராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட தடைகள் விதிக்கப்பட்டுள்ளம.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டங்கள், மெரினா கடற்கரையில் கூடுதல் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் மதுபான பார்களை நாளை இரவு 10 மணி முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல நாளை இரவு 10 மணி முதல் மெரினா கடற்கரை மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையின் பிரதான பகுதிகள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் காவல் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
எங்க தலைமையில்தான் கூட்டணி; முதல்வர் வேட்பாளர் யார்? – பரபரப்பை கிளப்பும் பாஜக!