1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (11:30 IST)

கருணாநிதியின் அஞ்சலி நிகழ்ச்சியில் கதறி அழுத துரைமுருகன்

கருணாநிதியின் மறைவு என்னை வாட்டி வதைக்கிறது என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கண்ணீர் மல்க பேசினார்.
திமுக தலைவராக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் தேதி முதுமை மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார். அவரது மறைவு திமுகவினரிடையே கடும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் வேலூரில் திமுக சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கருணாநிதி இல்லாத நாட்கள் என் வாழ்க்கையில் இருண்டுபோன நாட்களாக நினைக்கிறேன் என கண்ணீர் விட்டபடியே பேசினார். 
 
எனவே இப்பேற்பட்ட மாமேதைக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.