ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (05:54 IST)

அதிகாலை 4 மணிக்கு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமான நிலையில் இந்தியாவின் முக்கிய தலைவர்களும், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கட்சி வேறுபாடின்றி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
 
அதேபோல் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் உள்ள திரையுலகினர்களும் மறைந்த தலைவர் கருணாநிதிக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்
 
இந்த நிலையில் நடிகர் விஜய், அமெரிக்காவில் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் நேரில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை. இருப்பினும் விஜய் சார்பில் அவரது மனைவி சங்கீதா அஞ்சலி செலுத்தினார்.
 
இந்த நிலையில் இன்று அதிகாலை 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் விஜய். 22 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்தபோதும், விமான நிலையத்தில் இருந்து நேராக வீட்டிற்கு செல்லாமல், கருணாநிதியின் நினைவிடம் சென்ற விஜய், அவருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்