1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (13:37 IST)

ரஜினிக்கு தெரியும் தனுஷ் கஸ்தூரி ராஜா மகன் இல்லை என்பது?

நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான் என மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகின்றனர். நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தாலும் அவர்கள் தொடர்ந்து தனுஷ் எங்கள் மகன் தான் என கூறி வருகின்றனர்.
 
நீதிமன்றத்துக்கு சென்ற கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனவும், அவன் சிறு வயதில் சென்னைக்கு ஓடி வந்துவிட்டதாகவும், தற்போது எங்களுக்கு வயதாகிவிட்டதால் தனுஷ் எங்களை கவனிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
 
தனுஷ் தங்கள் மகன் தான் என பல ஆதாரங்கள் அளித்தனர். தனுஷின் அங்க அடையாளங்களை கூறினர். ஆனால் அவை நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மீண்டும் இந்த தம்பதியினர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கொண்டாடுகின்றனர்.
 
இது குறித்து தற்போது கூறும் அவர்கள், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான் என்பது நடிகர் ரஜினிகாந்தின் மனசாட்சிக்கு தெரியும். பெற்றோர்களாகிய எங்களை தனுஷ் பார்க்க, எங்களை கவனிக்க ரஜினிகாந்த் அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.