வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (12:52 IST)

பெரியபாண்டியன் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முனிசேகர்

மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை, ராஜஸ்தானில் தவறுதலாக சுட்டுக்கொன்ற, சக இன்ஸ்பெக்டர் முனிசேகர் பெரிய பாண்டியன் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டார். பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், பெரியபாண்டியனை சுட்டது 'சக ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியால்தான் என்று ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ்’ உறுதியாக தெரிவித்தார். இருந்தபோதிலும் பெரியபாண்டியனின் மனைவி, முனிசேகர் எனது கணவரின் நெருங்கிய நண்பர், அவர் தனது கணவரை சுட்டிருக்க வாய்ப்பில்லை எனக் கூறினார்.
இந்நிலையில் பெரியபாண்டியனின் 16-வது நாள் காரியத்திற்கு சென்ற முனிசேகர், அவரது மனைவியின் காலில் விழுந்து நடந்தவற்றைக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். கொள்ளையனை சுடும் போது தவறுதலாக, பெரியபாண்டியன் மீது பட்டு அவர் உயிரிழக்க நேரிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.