வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (15:16 IST)

#My_Next_CM_Rajini: மாஸ் காட்டும் மக்களின் தலைவன் ரஜினி!!

Rajinikanth

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #My_Next_CM_Rajini என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
நடிகர் ரஜினிகாந்த் 2022 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டச்சபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என கூறி வருகிறார். இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் தமிழகத்தை வேறு ஒருவர் ஆளக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் நேற்றைய பேட்டி ஒன்றில் பாரதிராஜா, ரஜினிகாந்த் ஒரு எளிமையான நபர். என்னுடைய நண்பர். ஆனால், தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கர்நாடகத்தை கர்நாடககாரந்தான் ஆள வேண்டும் என்பது விதி. அதேபோல் தமிழகத்தை ஏன் மண்ணின் மைந்தன் ஆளக்கூடாது? 
வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்க முடியாதோ, அதேபோல் ரஜினி ஆள நினைப்பதையும் ஏற்க முடியாது. தான் ஒரு தமிழ்நாட்டுக்காரர் என ரஜினி சொன்னாலும் அவர் வாழ வந்தவர்; தமிழர் இல்லை என பாரதிராஜா பேசினார். 
 
இவரது இந்த பேச்சு தற்போது #My_Next_CM_Rajini என்ற ஹேஷ்டேக் காலை முதல் டிவிட்டரில் டிரெண்டாவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது போலும். ரஜினி ஏன் அடுத்த முதல்வராக இருக்க வேண்டும் என இந்த ஹேஷ்டேக்கில் பலர் பதிவிட்டு வருகின்றனர். 
அதேபோல ரஜினியை இந்த அளவு மிகைப்படுத்தி பேசுவதற்கான அவசியமே இல்லை அவர் முதல்வராக கூடாது எனவும் பலர் தங்களது கருத்துக்களை இந்த டேக்கின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.