புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (17:08 IST)

என்ன இருந்தாலும் ரஜினி பிழைக்க வந்தவர்... பாரதிராஜா காட்டம்!!

வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்க முடியாதோ, அதேபோல் ரஜினி ஆள நினைப்பதையும் ஏற்க முடியாது என பாரதிராஜா பேசியுள்ளார். 
 
நடிகர் ரஜினிகாந்த் 2022 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டச்சபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என கூறி வருகிறார். இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் தமிழகத்தை வேறு ஒருவர் ஆளக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பாரதிராஜா ரஜினி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ரஜினிகாந்த் ஒரு எளிமையான நபர். என்னுடைய நண்பர். ஆனால், தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 
 
கர்நாடகத்தை கர்நாடககாரந்தான் ஆள வேண்டும் என்பது விதி. அதேபோல் தமிழகத்தை ஏன் மண்ணின் மைந்தன் ஆளக்கூடாது? தவறான முன்னுதாரணத்தை வைத்துக்கொண்டு இப்போது அதை சொல்லக்கூடாது. 
 
தெரியாமல் தமிழன் தொலைந்துவிட்டான். இப்போது விழித்துக்கொண்டான். வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்க முடியாதோ, அதேபோல் ரஜினி ஆள நினைப்பதையும் ஏற்க முடியாது. தான் ஒரு தமிழ்நாட்டுக்காரர் என ரஜினி சொன்னாலும் அவர் வாழ வந்தவர்; தமிழர் இல்லை என பாரதிராஜா பேசியுள்ளார்.