1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (15:27 IST)

30 வருடங்கள் கழித்து இன்று முதன் முதலாக ஓட்டுப்போட்ட ரஜினி ரசிகர்

30 வருடங்களாக ஓட்டுப்போடாதவர் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதன் முதலாக வாக்களித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 90 களில் இருந்து பஒரு பேச்சு அடிபட்டது. ஆனால்  தான் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்ட  நிலையில் அவரது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார். அப்போது, இனிதான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எனவே அவரது ரசிகர்கள் மற்ற கட்சிகளில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் வசிக்கும் அகம்கேந்திரன் என்பவர் ரஜினி அரசியலுக்கு வருவார் என 30 ஆண்டுகளுக்கு மேலாக  வாக்காளிக்காமல் இருந்த நிலையில் இன்று முதன் முதலாக வாக்களித்துள்ளார்.