செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 13 நவம்பர் 2018 (09:34 IST)

ஒரு சொட்டு ரத்தத்திற்கு ஒரு கிலோ ரத்தத்தை எடுப்போம்: அதிமுக அமைச்சரின் திமிர் பேச்சு

அதிமுககாரன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் எதிராலி ஒரு கிலோ ரத்தத்தை சிந்த வேண்டியிருக்கும் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா இருந்த போது யாரென்றே தெரியாத அமைச்சர்கள் எல்லாம் அவரின் மறைவிற்கு பின்னர் தைரியமாக வெளியே பேச ஆரம்பித்துள்ளனர். சர்ச்சைக் கருத்தைக் கூறுவதையே ஃபுல் டைம் வேலையாக செய்து வருகின்றனர் சில அமைச்சர்கள். அதில் முக்கிய பங்கை வகிப்பவர் தான் நம் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
 
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் அதிமுக எனும் மாபெறும் இயக்கத்தை அசைக்க எந்த கொம்பனாலும் முடியாது. மேலும் அதிமுக காரன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் எதிராலி ஒரு கிலோ ரத்தத்தை சிந்த வேண்டியிருக்கும் என திமிராக பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.