திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 நவம்பர் 2018 (08:15 IST)

புற்றுநோயால் மத்திய அமைச்சர் அனந்தகுமார் திடீர் மரணம்

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் திடீரென இன்று அதிகாலை மரணமடைந்தார்.
கர்நாடகத்தை சேர்ந்த அனந்தகுமார் மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் அனந்தகுமார். இவர் பாஜகவை சேர்ந்தவர் ஆவார்.
 
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவரது உடல்நலம் சீராகவே அவர் கர்நாடகத்திற்கு திரும்பினார்.
 
சமீபத்தில் அவரது உடல்நலம் மீண்டும் மோசமாகவே அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அனந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் செலுத்தி வருகின்றனர்.