1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 நவம்பர் 2018 (16:48 IST)

விஜய்யை எதிர்த்து அஜித்திற்கு ஆதரவு கொடுத்த தமிழக அமைச்சர்கள்

விஜய் நடித்த சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அமைச்சர்கள், பில்லா பாண்டி படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 
அண்மையில் அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘சர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சர்ச்சைக்குரிய வகையில் சில காட்சிகள் இருக்கின்றன. என்றும் அந்தக் காட்சிகளை படக்குழுவினர், அவர்களாகவே நீக்கி விடுவது நல்லது, அப்படி நீக்கம் செய்யப்படவில்லை என்றால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும்,  நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல என்றும் காட்டமாக தெரிவித்திருந்தார்.
 
இந்தநிலையில் தற்பொழுது,  அமைச்சர் கடம்பூர் ராஜு பில்லா பாண்டி படத்தைப் பார்த்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார். 
 
மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டாத ஒரு படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு ரிவ்யூ தந்திருப்பது இதுவே முதல் முறை. 
 
பில்லா பாண்டி படத்தைப் பார்த்து கடம்பூர் ராஜு கூறியதாவது, இந்த  படத்தைப் பார்த்தேன். எதார்த்தமான நடிப்பில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று புகழ்ந்துள்ளார்.  
 
"அஜித்தை கடவுளாக நினைக்கும்  ஒரு தீவிர ரசிகனின் கதை தான் பில்லா பாண்டி படம்".  
 
சர்காரை விமர்சித்த அமைச்சர் கடம்பூர் ராஜு,  நடிகர் அஜித்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பில்லா பாண்டி படத்தை பாராட்டியது விஜய் ரசிகர்களிடையே சற்று கடுப்பை உருவாக்கியுள்ளது.