1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (13:26 IST)

கட்சி தாவும் முக்கிய எக்ஸ் மினிஸ்டர்... வரவேற்கும் திமுக; வெறுப்பாகும் அதிமுக!

திமுக தலைவர் முக ஸ்டாலினை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் சந்தித்து பேசியுள்ளார். 
 
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றனர்.  
 
அதேபோல ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. 
 
உள்ளாட்சி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் சந்தித்து பேசியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும்,விரைவில் திமுகவில் இணைய உள்ளதாகவும்   ராஜ.கண்ணப்பன் பேட்டி அளித்துள்ளார். 
 
ராஜ கண்ணப்பனின் வரவி திமுக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அதிமுகவினர் இதனால் கடுப்பாகியுள்ளனர். இதற்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அண்ணனும் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.