வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 4 ஜனவரி 2020 (15:24 IST)

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல காற்றழுத்தம் நிலவுவதால், வடக்கு உள்தமிழகத்தில் இருந்து வடக்கு உள்கர்நாடகா வரையுள்ள இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவான மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், இங்கு ஒருசில இடங்களில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ள அதேவேளையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 24 டிகிரி வெப்பநிலை இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.