திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (15:26 IST)

திருப்பி அனுப்பப்பட்ட சென்னை விமானங்கள்..

பனிமூட்டம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனி மூட்டம் நிலவியதால், துபாய், சார்ஜா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்த விமானங்கள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறக்க அனுமதிக்கவில்லை. மேலும் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

அதே போல் சென்னையிலிருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 23 விமானங்கள் தாமதாகவும் புறப்பட்டு சென்றன.