தொடர்புடைய செய்திகள்
- நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!
- ஏங்ங்க.. ஊரே வெள்ளக்காடு.. ஜாலியா டைவ போடு! சப்இன்ஸ்பெக்டர் அட்ராசிட்டி! - நெட்டிசன்கள் கண்டனம்!
- கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!
- தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
- சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!
சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மேலும் 27 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, பெரம்பலூர், தென்காசி, விருதுநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Edited by Mahendran
