புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (18:46 IST)

தாங்காத சென்னை... செம்பரம்பாக்கதில் 3,307 கன அடி நீர் திறப்பு !

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு. 

 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதன் காரணமாக சென்னையில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னையின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மணிக்கணக்கில் விடாமல் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.  
 
இதனிடையே ஒரு நாள் மழைக்கே செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு நீர் திறக்கப்பட்டது. அதாவது, 500 கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த அளவு 3,307 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோரம் வாழும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.