புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (17:50 IST)

அடுத்த 3 மணி நேரத்திற்கு 27 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 27 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ஈரோடு, கோவை, நீலகிரி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ,கன்னியாகுமரி ஆகிய 27 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva