1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain Forecast for 20 Districts in Tamil Nadu Tonight

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

மழை
இன்று இரவு தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை முதல் லேசான மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில், இன்று இரவு தமிழகத்தில் திருவாரூர், தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை, இடி மின்னலுடன் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதேபோல், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்