திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (15:33 IST)

இன்று முதல் ஒரு வாரத்திற்கு இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இன்று முதல் அதாவது டிசம்பர் 11 முதல் ஒரு வாரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை தமிழக முழுவதும் பரவலாக பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வந்தோம். 
 
குறிப்பாக மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது 
 
இந்த நிலையில் வளிமண்டல கீழாடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஒரு இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran