1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain chances to seven districts at tamil nadu

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

மழை
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் மற்றும் காற்றின் மேலாடுக்கு சுழற்சி காரணமாக மேற்கண்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது 
 
இதனை அடுத்து மேற்கண்ட 7 மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
2 விமானங்கள் மோதி பயங்கர தீ விபத்து..! கடலோர காவல் படையை சேர்ந்த 5 பேர் பலி...!!