1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2024 (08:30 IST)

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கனமழைக்கு வாய்ப்பா?

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் சமீபத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் தற்போது அதே பகுதியில் நிலவி வருவதாகவும் இன்று இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  
 
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறினால் அது தென் அரபிக் கடலின் மத்திய பகுதியில் நிலவக்கூடும் என்றும் இதனால் தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
காற்றழுத்த தாழ்வுப்பகுதி உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் இது புயலாக மாறுமா? என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
 சமீபத்தில் தான் மிக்ஜாம் புயல் தமிழகத்தை புரட்டி எடுத்த நிலையில் மீண்டும் ஒரு புயல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva