அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்! – வானிலை ஆய்வு மையம் தகவல்
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஜூன் 18 முதல் 20 வரை தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.