வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (12:32 IST)

அர்ச்சகர் பயிற்சிக்கு விரைவில் மாணவர் சேர்க்கை – அமைச்சர் சேகர் பாபு தகவல்!

தமிழக திருக்கோவில்களில் பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் அதற்கான பயிற்சி பள்ளிகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை பொது இணையதளத்தில் பதிவேற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் சமீபத்தில் ஆகம பயிற்சி பெற்ற அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேசியுள்ள தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ”அர்ச்சகர் பயிற்சிகான பள்ளிகள் புணரமைக்கப்பட்டு புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அர்ச்சகர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வருவதை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.