புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 16 அக்டோபர் 2021 (13:30 IST)

14 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில மாதங்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் அரபிக்கடல் மற்றும் வாங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது