1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rain again start in chennai

சென்னையில் மீண்டும் வேலையை காட்டத் தொடங்கிய மழை

சென்னை
வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  காரணமாக தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.






 



வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து சென்னையில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று இரவு முழுவதும் பெய்த கன மழையால் சென்னை நகரம மட்டுமின்றி புறநகரும் வெள்ளத்தில் மிதந்தன.

இந்த நிலையில் காலை முதல் மழை இல்லாத நிலையில், இன்று மாலையிலிருந்து மழை மீண்டும் வெளுத்து வாங்கத் துவங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று போன்றே இன்றும் இரவு முழுக்க விடாது மழை பெய்யுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
About Writer
bala