திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2017 (17:36 IST)

தமிழகம் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையில் பார்ட்டி வைத்த 'ஆளப்போறான் தமிழன்'

ஒருபக்கம் தமிழகம் கடந்த ஐந்து நாட்களாக கனமழை காரணமாக தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் 'ஆளப்போறான் தமிழன்' என்ற பாடல் இடம்பெற்றுள்ள 'மெர்சல்' திரைப்படத்தின் சக்சஸ் பார்ட்டி நேற்று இரவு நடந்துள்ளது.


 


விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் நல்ல வெற்றி பெற்று வசூலை குவித்த நிலையில் நேற்றிரவு விஜய்க்கு சொந்தமான ஈசிஆர் சொகுசுவிடுதியில் சக்சஸ் பார்ட்டி நடந்தது. இந்த பார்ட்டியில் இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்றிரவு முழுவதும் சென்னை மக்கள் கனமழை காரணமாக தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தை ஆள்வார் என்று அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் விஜய் சக்சஸ் பார்ட்டி வைத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மெர்சல் திரைப்படம் உண்மையான வெற்றியை பெற்றிருந்தபோதிலும் பார்ட்டி வைக்க இதுதான் சரியான் நேரமா? என்று பலர் டுவிட்டரில் கேள்வி கேட்டு வருகின்றனர்.