1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Raid in Tanjore temple by pon.manickavel

அடுத்த அதிரடியில் பொன்.மாணிக்கவேல் - தஞ்சை பெரிய கோவிலில் திடீர் ஆய்வு

சிலை கடத்தல்
ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் சிறப்புப் பிரிவு போலீஸார் தஞ்சை பெரிய கோவிலில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐஜி பொன். மாணிக்கவேல் திருடப்பட்ட பல சிலைகளை அதிரடியாக பறிமுதல் செய்து வருகிறார். சமீபத்தில் கூட சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சென்ற குழு 89 சிலைகளை பறிமுதல் செய்தது. அதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.100 கோடி எனக் கூறப்படுகிறது. தஞ்சை கோவிலில் இருந்து திருடப்பட்ட சிலைகளும் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆய்வு நடத்த சென்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கோவிலில் இருந்த பக்தர்களை வெளியேற்றிவிட்டு சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.